பார்முலா 4 பந்தய பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த காவலர்; ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

By Velmurugan sFirst Published Aug 31, 2024, 11:28 PM IST
Highlights

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சிவக்குமார் (வயது 53). இன்று பகல் 12.45 மணி அளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

Formula 4: போட்டி தொடங்கும் முன்பே உயிர்பலி - உதவி ஆணையர் உயிரிழப்பு

Latest Videos

காவல்துறை உதவி ஆணையர் சிவக்குமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

Paris 2024 Paralympics: ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

சிவக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!