சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரமோஷன் நிறுவனம் சார்பில் சென்னையில் பார்முலா 4 கார் நஇ்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோவில் இலவச பயணம்! ஆனால் ஒரு கண்டிஷன்!
மொத்தமாக 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் ஆரம்பமாகி போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பிரிட்ஜ், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வழியாக மீண்டும் தீவுத் திடலை வந்தடைகிறது.
இந்நிலையில் கார் பந்தயத்தை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு: தமிழர்களின் திறமையை உலகறிய செய்த முதல்வர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கார் பந்தயத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.