வேலை தேடி சென்னை வரும் பெண்களே உஷார்; விபசார கும்பலிடம் இருந்து இளம் பெண்கள் மீட்பு

By Velmurugan s  |  First Published Sep 1, 2024, 7:49 PM IST

சென்னைக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தலைநகர் சென்னைக்கு தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு, ஆந்திரா, தெலங்கான உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். அப்படி வேலை தேடி வரும் நபர்களில் வேலை கிடைக்காத இளம் பெண்களை குறி வைக்கும் கும்பல் அவர்களிடம் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் மூளைச் சலவை செய்யத் தொடங்குகின்றனர். அப்படி மூளைச்சலவை செய்யப்படும் இளம் பெண்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி அக்கும்பல் பாலியல் தொழிலி்ல் ஈடுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறும் மருத்துவமனைகள்?

Tap to resize

Latest Videos

undefined

ஒருசில பெண்கள் அக்கும்பலிடம் இருந்து தப்பும் நிலையில் சிலர் அவர்களிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த வரிசையில் வேலை தேடி வந்த பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் தான் வினோத். இவர் நீலாங்கரைப் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக விபசார தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பபட்ட வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

என்னடா ஆட்டு குட்டிய தூக்கிட்டு போறமாதிரி போறீங்க? முதலையை பைக்கில் தூக்கி சென்ற இளைஞர்கள்

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வடபழனி பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

click me!