Vijay TVK Party : இந்த மாத இறுதியில் விக்ரவாண்டியில், தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகை பொருத்தவரை மிக பிரபலமான நடிகராக கடந்த 35 ஆண்டுகளாக பயணித்து வந்த தளபதி விஜய். விரைவில் தனது கலை உலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் அவர். பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் தங்களுடைய புகழ் மங்க தொடங்கும் நேரத்தில் தான் அரசியலை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள்.
ஆனால் தளபதி விஜய் விஷயத்தில் அது அப்படியே தலைகீழாக உள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய், இப்போது கலை உலக விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், பல சிறந்த கதைகளோடு காத்திருக்கும் இயக்குனர்கள் என்று அவருக்கான திரை வாய்ப்பு வேறொரு லெவலில் இருக்கும் இந்த சூழலில், தளபதி விஜய் திரையுலகை விட்டு விலகுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
undefined
இருப்பினும் தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த விஷயங்களை செய்யவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தளபதி விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாத இறுதியில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக பல முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல தகவல்களை கொடுத்திருக்கிறார். அதன்படி விரைவில் நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டில் கட்டாயம் சிறார்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
ஆகவே பெரியவர்கள் தங்களோடு தங்களுடைய பிள்ளைகள் அல்லது சிறியவர்கள் யாரையும் அழைத்து வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 30,000 பேர், பெண்கள் 15,000 பேர், முதியவர்கள் ஐயாயிரம் பேர், மாற்றும் திறனாளிகள் 500 பேர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 50,000 பேருக்கு இப்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகமாக மக்கள் இந்த மாநாட்டிற்கு கூடலாம் என்கின்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
ஸ்டாண்ட் அப் காமெடி டூ ஆன்மிகம்.! யார் இந்த மகா விஷ்ணு- இன்னொரு நித்யானத்தாவா.?