மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 17ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற 16ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்தது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவித்து அரசாணையும் வெளியிட்டு இருந்தது. ஆனால் கடந்த 4ம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை சரிவர தெரியாததால் வருகின்ற 17ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
undefined
இதனைத் தொடர்ந்து தலைமை காஜி தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளார்.
12வது முடிச்சவங்க உடனே அப்ளை பண்ணுங்கப்பா: கடற்படைல 69,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு
முன்னதாக செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.