"மூன்றெழுத்து அரசியல் வாரிசே".. பரபரப்பை கிளப்பிய த.வெ.க தொண்டர்கள் - வைரலாகும் போஸ்டர்!

By Ansgar RFirst Published Sep 22, 2024, 11:43 PM IST
Highlights

TVK Vijay : தளபதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியில் மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடத்த உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் அறிவித்த முதல் விஷயமே அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டங்களை ஏற்படுத்தியது. அது தான் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மக்களுக்கு அறிமுகம் செய்தது. ஆனால் அதே நேரம் திரைத்துறையில் அவரை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு பேரடியாக அமைந்தது, அவர் திரைத்துறையில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறிய தகவல்கள். 

ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, முழுநேர அரசியல் தலைவராக களமிறங்க உள்ளதாகவும். இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தது தான் விஜயின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றால் அது சற்றும் மிகையல்ல. இன்றும் பல சக நடிகர்களும், இளைஞர்களும், தளபதியின் ரசிகர்களும் பெரிய அளவில் பாராட்டக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது தளபதியின் அந்த ஒரு தைரியமான முடிவு தான். 

Latest Videos

சிறுவர்கள் மீதான தாக்குதல்.. பாடகர் மனோ மகன்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீன் - முழு விவரம்!

காரணம், பொதுவாக திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் சினிமாவில் தங்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்ற நேரத்தில் நான் அவ்வாறு செய்வார்கள். ஆனால் தளபதி விஜயை பொறுத்தவரை, சுமார் 200 கோடி வரை சம்பளம் வாங்கும் டாப் நடிகராக விளங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்தது தான் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் களமிறங்குகிறார். ஏற்கனவே அவருடைய கட்சியின் கொடியும், கட்சி பாடலும் வெளியான நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை அவர் நடத்த உள்ள நிலையில், திருச்சியை சேர்ந்த த.வெ.க தொண்டர்கள் அடித்துள்ள போஸ்டர் தான் தற்பொழுது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

"ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர் இவர்கள் வரிசையில் மூன்றெழுத்து அரசியல் வாரிசாக தளபதி விஜய் விரைவில் வர இருக்கிறார். 2024ல் எழுச்சி மாநாடு 2026ல் தமிழ்நாடு" என்கின்ற வாசகங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

"விஜயுடன் இணைத்து சர்ச்சை பேச்சு" கிளப்பிவிட்ட YouTube சேனல் - சும்மா லெப்ட் ரைட் வாங்கிய சிம்ரன்!

click me!