சென்ற 10 ஆண்டுகளில் இந்த நாட்டு மக்கள் சாத்தியமில்லாதது என்று கருதிய பலவற்றை சாத்தியமாக்கி நிரூபித்துள்ளனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
புதுச்சேரியில் 7வது ஆண்டாக நடைபெறும் புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024 நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரையில் கூறியதாவது:
ஒரு நாடு, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதுதான் பாரதம் உலகிற்கு அளித்துள்ள செய்தி. இதுதான் பாரதத்தின் சக்தி. நாம் கொரோனா காலத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தோம். இதுதான் பாரதத்தின் சக்தி. இதுதான் பாரதம்.
பயம் என்பதுதான் மிகவும் அழகான வார்த்தை என்று ஜென்னி ஹோசியர் என்பவர் கூறினார். மக்கள் மனதில் பாதுகாப்பின்மை உணரச் செய்ய வேண்டும். அதைப் பெருக்கி வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். பொதுமக்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு வளரும்போது, அவர்கள் பீதியடைந்து பொது நம்பிக்கையைக்கு எதிராக செயல்பட வைக்கிறது. இவை அனைத்தும் ஜென்னி கூறுபவை. இதை இங்கே அராஜகவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஏனென்றால், அவர்கள் பாரதம் வளர வேண்டும் என்று விரும்பவில்லை. நாம் இதுபற்றி கவனமாக இருக்க வேண்டும்.
இன்று பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம்மை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் G20 மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்தியபோது அதன் நோக்கம் வசுதைவ குடும்பகம் என்பதுதான். ஒரு உலகம் ஒரு குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற பார்வை நம் முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்த்ததன் மூலம் அதை பாரதம் எடுத்துக்காட்டியது.
கொரோனா காலத்தில் உலகமே அதன் பிடியில் இருந்தபோது பாரதத்தின் சக்தியைப் பார்த்தோம். அப்போது சில வளர்ந்த மேலைநாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்தன. அந்தப் பேரழிவு காலத்தில் முன்னேறிய நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதுதான் அவர்களின் தடுப்பூசி தேசியவாதம் வளர்ந்தது. தடுப்பூசிகளை தேவைக்கு அதிகமாகவே சேமித்து வைத்தார்கள். நம் விஞ்ஞானிகளுக்குதான் நன்றி செலுத்த வேண்டும். அப்போது நாம் தடுப்பூசியைக் கண்டுபிடித்தோம். 150 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அதனைப் பகிர்ந்துகொண்டோம்.
பாரதம் உலக அமைதியைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய பாரதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். இந்தப் புதிய பாரதத்தை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும். நாம் எங்கிருந்தாலும், நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமது அதிகபட்ச திறனுக்கு உயர வேண்டும். இது பாரத்தின் பொற்காலம். கனவுகள் நனவாகும் தருணம்.
சென்ற 10 ஆண்டுகளில் இந்த நாட்டு மக்கள் சாத்தியமில்லாதது என்று கருதிய பலவற்றை சாத்தியமாக்கி நிரூபித்துள்ளனர். இது சாதனைகள் புரியும் காலம். இந்த பாண்டிச்சேரி இலக்கியத் திருவிழா மக்களுக்கு அறிவொளி ஏற்றுகிறது. அது சிறிய பொறி அளவுக்கு இருந்தாலும், சங்கிலித்தொடர் விளைவாக அது மேலும் மேலும் பலருக்கு ஒளியைப் பரப்பும். அதன் மூலம் பாரதம் வளரமும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாரதம் தொடர்ந்து உலகை வழிநடத்தும்.
இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
பெண் குழந்தையின் திருமண வயதில் ரூ.50 லட்சம்... பெற்றோர் முதலீடு செய்வது எப்படி?