அட கடவுளே! சுற்றுலா வந்த இடத்தில் இப்படியா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Aug 10, 2024, 1:22 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ரதவீதி கொத்தனார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (55), இவர்களுக்கு சுந்தரேசன் (25) என்ற மகனும், சவுந்தர்யா (22) என்ற மகளும் உள்ளனர்.


சுற்றுலா வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ரதவீதி கொத்தனார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (55), இவர்களுக்கு சுந்தரேசன் (25) என்ற மகனும், சவுந்தர்யா (22) என்ற மகளும் உள்ளனர். கடந்த 7-ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

Latest Videos

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவில் அள்ள அள்ள தங்கம்! கோடிகளில் குவிந்த உண்டியல் காணிக்கை! வியந்த பக்தர்கள்!

அறையை காலி செய்வதாக கூறிய நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதியின் ஊழியர்கள் சந்திரசேகரன் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் சடலமாக கிடந்தனர். 

இதையும் படிங்க:  பயணிகள் கவனத்திற்கு! இந்த 3 நாட்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது! தெற்கு ரயில்வே!

இதனையடுத்து 4 பேரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் பிரச்சனையா? இல்ல வேறு எது பிரச்சனையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!