விபச்சார வழக்கில் கைதான பொண்டாட்டி.. அவமானத்தால் இரண்டு குழந்தைகளை கணவர் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 13, 2024, 2:33 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33). இவர் காலப்பாட்டை சேர்ந்த கீர்த்தி என்ற கவுசல்யா (26) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


விபச்சார வழக்கில் மனைவி கைதானதால் கணவன் அவமானம் தாங்காமல் இரண்டு பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33). இவர் காலப்பாட்டை சேர்ந்த கீர்த்தி என்ற கவுசல்யா (26) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோவிதா(4) ஒரு வயதான சுஸ்மிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தற்போது புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

Latest Videos

இந்நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்  கடந்த 10ம் தேதி இரவு ஆனந்தவேலின் மனைவி கவுசல்யாவை புதுவை மாநில போலீசாரால் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் அவமானத்தால் ஆனந்தவேலு குழந்தைகளான ஜோவிதா, சுஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு மீனவ கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை கூனிமேடு கடற்கரை பகுதியில் 2 பெண் குழந்தைகளின் சடலம் கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

உயிரிழந்த குழந்தைகள் ஆனந்தவேலுவின் மகள்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இரண்டு குழந்தைகளையும் கடலில் வீசிவிட்டு தானும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குழந்தைகளை மட்டும் கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தன்னை தேடுவதை அறிந்த ஆனந்தவேலு  மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!