Latest Videos

முறையாக அனுமதி பெறாத 33 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து; புதுவை அரசு அதிரடி

By Velmurugan sFirst Published Jun 27, 2024, 10:58 PM IST
Highlights

புதுவையில் முறையான அங்கீகாரம் இல்லாத 33 தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. அது சட்டத்துக்கு முரணானது என்று கருதப்படுகிறது. முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு 15 - 12 - 2023 அன்று பள்ளிக்கல்வித் துறையானது உத்தரவிட்டது. மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.

காதலிச்சி கர்ப்பமாக்க தெரியும், கல்யாணம் பண்ண முடியதா? ராணுவ வீரரை பொளந்து கட்டிய உறவினர்கள்

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளிக் கல்வித் துறையானது 25 - 06 - 2024 அன்று உத்தரவிட்டுள்ளது. எனவே அத்தகயை அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகல் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

பித்தம் தலைக்கு ஏறியதால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிறார் பழனிசாமி; அமைச்சர் நேரு அதிரடி

அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, “புதுச்சேரி பள்ளிக் கல்விச் சட்டம் 1987 மற்றும் பாண்டிச்சேரி பள்ளிக்கல்வி விதிகள், 1996 ஆகியவற்றின் படி விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் படி அங்கீகாரச் சான்றிதழைப் பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர் அங்கீகாரத்தை திருமப் பெற்ற பிறகு 1 லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக் கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்்நது விதி மீறல்கள் இருந்தால் அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!