விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த விவகாரம்; முதல்வர் அவசர ஆலோசனை, நிவாரணம் அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jun 11, 2024, 5:10 PM IST

புதுச்சேரியில் விஷ வாயுவால் உயிரிழந்த சிறுமிக்கு ரூ. 30 லட்சம், இறந்த இரு பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சரங்கசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறையை கண்டித்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு மற்றும் சமூக அமைப்பினர் சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் நடக்கக்கூடாது,  கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுப்பணித்துறையின் செயல்பாட்டை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

Breaking: புதுவையில் கழிவறை வழியாக பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி - இருவர் கவலைக்கிடம்

Latest Videos

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரெட்டியார் பாளையத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருந்ததத்தக்கது. பாதாளச்சாக்கடை திட்டம் முழுமையடையும் நிலையில் உள்ளது. வீட்டுக்கு வீடு இணைப்பு தரும் பணி நடந்து வருகிறது. இணைப்பு தரும் பணியில் குளறுப்டிகள் நடந்துள்ளது. அதனால் விஷவாயு உருவாகியுள்ளது. 

பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்

இதுகுறித்து முழுமையாக விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கும் இதுபோல் சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தும். புதுநகரில் முறையாக ஆய்வு செய்து இப்பிரச்சனை முழுமையாக சரி செய்யப்படும். மேலும் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணமும். இரு பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் உடனடியாக தரப்படும் என தெரிவித்தார். 

முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

click me!