கோவையில் குழந்தையின் மூச்சுக்குழாயில் துகள்; வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவர்கள் அசத்தல்

By Velmurugan s  |  First Published Jan 26, 2023, 10:55 PM IST

கோவை மாவட்டம் பொளாச்சியில் 7 வயது ஆண் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கி இருந்த சிறிய அளவிலான பொருளை வெற்றிகரமாக அகற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை திடீரென்று ஏற்பட்ட இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவி்ல்லை. 

தென்காசியில் காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள்

Latest Videos

undefined

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிறிய அளவிலான துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த குழந்தைக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த பொருள் அகற்றப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் உடல் துண்டாகி பலி

தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையை செய்து முடித்தனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமணை முதல்வர் பேராசிரியர் நிர்மலா மருத்துவக் குழுவினரை பாராட்டினார். அயல் பொருளை எடுக்காமல் விட்டு இருந்தால் குழந்தைக்கு நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆகையால் குழந்தைகளுக்கு தீடிரென மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ இருமல் ஏற்பட்டாலோ மருத்துவரை உடனடியாக அணுகி மேற்கொண்டு சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்களால்  அறிவுறுத்தப்படுகிறது.

 

click me!