பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!

By Raghupati R  |  First Published Jan 23, 2023, 3:38 PM IST

பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர்  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல். இவர் வேறு யாருமில்லை. பிரபல யூடியூப் சேனல்களான சைபர் தமிழா மற்றும் சுஹைல் விலாகர் சேனல்களின் உரிமையாளர்.

இவர் மனைவி பெயர் பாபினா. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் ஹோம் டூர் வீடியோ தனது  யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வீடு கட்டியது எப்படி ? முதல் எவ்வாறு கட்டியுள்ளோம் ? என பல்வேறு தகவல்களை அதில் கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..மாமியார் வீட்டுக்கு போன மனைவி.. திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் - அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே உள்ள பிச்சனூர் பகுதியில் வீடு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வீடியோவை பார்த்த இவரின் சப்ஸ்க்ரைபர் ஒருவர் தனது வேலையை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் 25 வயதான அனுராமன். வீட்டின் கதவை திறந்த சுஹைலிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

அவர் கையில் வைத்துள்ள மொபைல் போனை பறித்து கொண்டு தப்பித்து செல்ல முயற்சி செய்தபோது சுஹைல், அனுராமனை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் வைரம், அனுராமன் மீது வழக்கு பதிவு செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

click me!