குடியிருப்பு பகுதியில் கார் ஓட்டி பழகியபோது விபரீதம்; சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

By Velmurugan sFirst Published Jan 24, 2023, 1:25 PM IST
Highlights

கோவையில் முறையாக கார் ஓட்டிப் பழகாத நிலையில், காரை நிறுத்த முற்பட்டபோது தவறுதலாக சைக்கிளில் சென்ற சிறுவன் மீது வேகமாக மோதிய விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஷீத் என்பவரின் மகனான ரைஃபுதீன் தனது வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அதே பகுதியைச் சேர்ந்த சையது முஹம்மது என்பவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

நடத்தையில் சந்தேகம்; நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்

இவர் நேற்று தனது காரை ஓரமாக நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்  சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் தடுப்பு சுவற்றின் மீது தூக்கி வீசப்பட்ட சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக  வெரைட்டியால் சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு  காவல் துறையினர் சையத் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் குற்றச்சாட்டு

இதனிடையே  சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதும் பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறையாக கார் ஓட்டி பயிற்சி பெறாததே இந்த விபத்துக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

click me!