கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்கு கடந்த 12ம் தேதி மாலை மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்தார். மேலும் அலுவலகத்திற்குள் நுழைந்து அறையின் கதவை பூட்ட முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் சிக்னல் அருகே இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மர்ம நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் வெளியிட்டனர்.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்
இந்த நிலையில் உயிரிழந்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மார்பு பகுதியில் ஓம் சிவா என பச்சை குத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஏதேனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு