கோவை கார் வெடிப்பு பற்றி அவதூறு கருத்து… கிஷோர் கே சுவாமியை விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி!!

By Narendran SFirst Published Nov 28, 2022, 7:36 PM IST
Highlights

கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கில் கிஷோர் கே சுவாமிக்கு டிச.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு 6 மணி நேரம் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கில் கிஷோர் கே சுவாமிக்கு டிச.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு 6 மணி நேரம் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து உயிரிழந்த ஜமேஷா முபினின் உடல் அவரது மனைவியிடம் ஒப்பைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - டிடிவி தினகரன்

ஆனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஜாமாத்துகள் மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கு காரணமாக நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடக்கம் செய்ய முடியாது என்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுக்குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த தகவலை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சுவாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் ட்விட் செய்திருந்தார்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்..? இலவச மின்சாரம் ரத்து செய்ய திட்டமா.? செந்தில் பாலாஜி விளக்கம்

இந்த சர்ச்சை கருத்துக்காக கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், கைதான கிஷோர் கே சுவாமியை போலீஸ் காவலில் விசாரிக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நீதிபதி சரவணா பிரபு முன்பாக மனு  தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிஷோர் கே சுவாமிக்கு டிச.12 ஆம் தேதி நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது. மேலும் சைபர் கிரைம் போலீசார் 6 மணி நேரம் கஸ்டடி எடுத்து விசாரித்து கொள்ளவும்  அனுமதி அளிக்கப்பட்டது. 

click me!