மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் கார்டு இணைப்பு குறித்து அதிமுக, பாஜகவினர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆதார் எண் இல்லை என்றாலும் இப்போது கட்டணம் செலுத்தலாம். ஆனால் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மின் துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசியம். போராட்டம் அறிவித்துள்ள அதிமுகவினரிடம் சாலைகள் இந்த ஒன்றரை வருடத்தில்தான் மோசமானதா என கேளுங்கள். அதிமுக ஆட்சியில் போடாத சாலைகளை இந்த அரசு போடுகின்றது. யார் இந்த துறையை நிர்வகித்தார்களோ அவர்கள் போடாத சாலையை இந்த அரசு போடுகின்றது.
இதையும் படிங்க: சென்னை மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்… கேம்பஸ் இன்டர்வீயூ-வில் தேர்வு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்தும் அவர்கள் கலந்து கொள்வதில்லை. சிறு,குறு தொழில் முனைவோருக்கு கட்டணமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டார்கள். 2500 கோடி ரூபாய் கட்டணத்தை குறைத்து இருக்கின்றோம். 1.59 லட்சம் கடன் இருக்கும் நிலையில் மின்வாரியம் குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது கர்நாடகா போன்ற அருகாமை மாநில மின்கட்டணங்களை விட இங்கு கட்டணம் குறைவு. நிலைகட்டணம், பீக் ஹவர் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. குறைத்து கொடுங்கள் என கேட்பதுதான் சரியாக இருக்கும். மூலப்பொருட்கள் விலை கூடிய போது ஏற்கனவே இருக்கும் விலைக்கு அவர்களால் பொருட்களை கொடுக்க முடியாதோ அது போலத்தான் இதுவும்.
இதையும் படிங்க: அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும்… ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை!!
உயர்த்த பட்ட கட்டணம் பிற மாநிலங்களை விட குறைந்த அளவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. தொழில் முனைவோர் மின்வரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு ஆதரவை கொடுத்து முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். மின்சார வாரியம் கடனில் இருக்கின்றது. தொழில் துறை தரப்பை மட்டுத் பார்க்காமல் இரு தரப்பையும் பார்க்க வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் கர்நாடாகவில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்றிலேயே தொழில் முனைவோருடன் 3 மணி நேரம் முதல்வர் உட்கார்ந்து கோரிக்கைகளை கேட்டுள்ளார். வேறு கோரிக்கைகளை சொன்னால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.