கோவையில், டிச.2ம் தேதி திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம் - எஸ்.பி.வேலுமணி

Published : Nov 25, 2022, 09:52 PM IST
கோவையில், டிச.2ம் தேதி திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம் - எஸ்.பி.வேலுமணி

சுருக்கம்

கோவையில் டிசம்பர் 2ஆம் தேதி திமுகவை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம்.! உண்ணாவிரதத்தை எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைக்கிறார் - ஒரு லட்சம் பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார்கள் என எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.  

கோவை மாவட்ட அதிமுக மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க தவறியதற்கும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு,கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எஸ் பி வேலுமணி, வரும் டிச-2ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைக்கிறார். மக்களுக்காக இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும், அதிமுகவில் மட்டும் 43,625 நிர்வாகிகள் உள்ளதாகவும் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?