சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி! - முதன் முறையாக கோவையில் அறிமுகம்!

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 10:09 AM IST

தமிழகத்தில் முதன்முறையாக சிறைக்கைதிகள் உறவினர்களிடம் எளிதில் பேசும் வகையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 


கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், வியாழக்கிழமை பார்த்து பேசவும் அனுமதிக்கப்படுகிறது.

இதற்காக சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து அதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பேச முடியும். சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள். வழக்கறிஞர்கள் இதே போன்று தான் பேசும் நிலையில் இருந்தது. வயதான கைதிகள் உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

வாயும் வாய்மையும் தான் பலம்..! தமிழகத்தில் திமுகவை வீழ்த்த எந்த கொம்பனும் கிடையாது- துரைமுருகன்

மேலும் வயதான உறவினர்கள் இளம் கைதிகளிடம் பேசும் போதும் புரிந்து கொள்ள முடியாததால், சத்தம் போட்டு பேச வேண்டிய நிலை இருந்தது. கோவை சிறைத் துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவுபடி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, ஜெயிலர் சிவராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு பக்கத்திலும் இன்டர்காம் வைத்து கைதிகளும் உறவினர்களும் எளிதில் பேச தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!