கோவை விழா தொழில் முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான தளமாக செயல்படுகிறது… மாநகராட்சி ஆணையர் கருத்து!!

By Narendran SFirst Published Nov 24, 2022, 11:55 PM IST
Highlights

கோவை விழா தொழில் முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான தளமாக செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார். 

கோவை விழா தொழில் முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான தளமாக செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார். கோவை தினத்தை முன்னிட்டு கோவை விழா தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயமுத்தூர் விழா என்பது கோயமுத்தூர் நகரின் தனித்துவமான வரலாறு கலாச்சாரம் ஆகியவற்றை போற்றும் விதமாக மட்டுமல்லாது இப்பகுதியில் தொழில் முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான தளமாக செயல்படுகிறது.

இதையும் படிங்க: எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது… தமிழுக்கு பெருமை சேர்த்தவர் என விருதுக்குழு பாராட்டு!!

இவ்விழாவானது பேரணிகள், அறிவியல், விழாக்கள், ஏக்கத்தான்கள் இசை நிகழ்ச்சிகள் மாரத்தான் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் என பல நிகழ்வுகள் மூலம் கோயமுத்தூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாகும். கோயம்புத்தூர் விழாவில் 15 ஆவது நிகழ்வு கொண்டாட்டங்களில் 15 முக்கிய நிகழ்வுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நகரம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளால் திட்டமிடப்பட்டுள்ளது. கனவுகளின் நீரூற்று கோவையின் முதல் இசைக்கு பிரதிபலிக்கும் நீரூற்று நிகழ்ச்சியாகும் வாளாகுளம் ஏரியில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதா... விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்!!

லேஷர் ஷோ, மாரத்தான், ஆர் ஸ்ட்ரீட் எனப்படும் கலைத்தொரு கோவையின் திறமை மக்களிடையே ஒளிந்திருக்கும் ஆற்றல் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வருதல், அக்ரி நெஸ்ட் விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட தனித்துவமான நிகழ்வு, தனித்துவமான கார்களின் அணிவகுப்பு, செப் பிலேட் கோயம்புத்தூர் வாசிகளின் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் அறுசுவை நிகழ்வு, சீரிய முனைப்புடன் புதிதாக தொழில் துவங்கும் தொழில் முனைவோரின் புதுமையான மற்றும் முன்னேற்றகரமான யோசனைகளை குழுவின் முன் வைக்க ஒரு இடம். இசை மழை, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கோவை விழாவின் 15ஆவது நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!