Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் ரம்மி தடை மசோதா... விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்!!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

governor rn ravi wrote letter to tn govt asking for explanation about online rummy ban bill
Author
First Published Nov 24, 2022, 9:26 PM IST

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஏராளமானோர் பணத்தை இழந்ததோடு உயிரையும் இழந்துள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதனால் மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை… காசோலைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பான அவசர சட்ட மசோதா நவம்பர் 27 ஆம் தேதியுடன் காலாவதியாவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது… தமிழுக்கு பெருமை சேர்த்தவர் என விருதுக்குழு பாராட்டு!!

பொதுவாக அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவுக்கு 6 வாரத்திற்குள்ளும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில் ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை செய்யும் மசோதா குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு நாளை அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படும் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios