கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கோவையில் உள்ள பள்ளியில் 7 - ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் பதிந்த பதிவை ட்விட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் விடுதியில் தங்கிய தன் மகன் சக மாணவர்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறியதோடு மகனுக்கு கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் அத்துமீறல்கள் நடத்தப்படுவதாகவும் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பதிவில் பள்ளியில் பெயர் குறிப்பிடப்படவில்லை.
undefined
A mother from a residential school in Coimbatore speaks of assault on her son. Boy is in 7th class.
She refuses to say which school. Her child has gone through 90% of what the Chennai child did.
The boy reported to his warden but nobody believed him.
Speak to your sons. 🙏🙏 pic.twitter.com/Jds07lYUmK