கோவை மாநகராட்சி எடுத்துள்ள முயற்சியால் கோவை நகரம் ஓவிய நகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சிகள், தனி நபர் என பலரும் எச்சரிக்கையையும் மீறி விளம்பர போஸ்டர்களை ஒட்டுவதால், நகரின் தூய்மை மற்றும் அழகு கெடுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர்.
undefined
இதற்கு தீர்வு காணும் வகையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பால தூண்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் தமிழ் காவியங்களில் வரும் காட்சிகளை ஓவியங்களாக வரைய மாநகராட்சி முடிவு செய்தது. முதல் கட்டமாக கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மேம்பால தூண்களில் இருந்த போஸ்டர்களை அகற்றிவிட்டு சிலப்பதிகார காவியத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன.
மாசாணியம்மன் கோவில் தீமிதி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
சுமார் நூறு தூண்களில் வரையப்படும் இந்த ஓவியங்களால் கோவை நகர் அழகு பெறுவது மட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறையினர் நமது தமிழ் காவியங்களை ஓவிய வடிவில் அறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு விசயத்தையும் பிளான் பண்ணி செய்யனும்: மின்வாரியத்தை சாடும் அன்புமணி