இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா.? கோடிக்கணக்கில் மோசடி செய்த 6 பேர் அதிரடி கைது !!

By Asianet Tamil  |  First Published Feb 4, 2023, 10:45 PM IST

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் என்பவர் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த காந்திராஜ் என்பவரது மகன் சரவணக்குமார் என்பவரிடம் விசாரிக்க மேற்படி சரவணகுமார் என்பவர் தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையில் இளநிலை உதவியாளராக பணி புரிந்து வருவதாகவும், தான் இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

Latest Videos

undefined

தனது கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் ஜவகர் பிரசாத், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் அன்பு பிரசாத், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த  செல்வராஜ் என்பவரது மகன் சரவணக்குமார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் சதீஷ்குமார், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சுரேந்திரன் மற்றும் சுப்பராமன் என்பவர் மகன் சுதாகர் ஆகிய நபர்களுடன் சேர்ந்து மேற்படி சந்தானகிருஷ்ணனிடம் இருந்து 21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

பிறகு போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்து ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்தவுடன், இதுகுறித்து சந்தான கிருஷ்ணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்ததில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  கோவை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இதுபோல் பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே மேற்படி 6 நபர்களை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இதுபோன்று அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

click me!