மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையிலிருந்து துவக்கம் - அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

By Velmurugan sFirst Published Feb 4, 2023, 2:58 PM IST
Highlights

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி சோதனை அடிப்படையில் கோவையிலிருந்து தொடங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று காலை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்களை விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா இக்கட்டான காலகட்டத்தை கடந்தும், 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின் சிறந்த பட்ஜெட் இது. சீனா, பிரிட்டன், அமெரிக்க உள்ளட்ட நாடுகளில் இன்னும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களை ஒப்பிடுகையில் சிறந்து மீண்டு பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுள்ளது.13.5 லட்சம் கோடியில் பெரிய அளவில் போடப்பட்ட பட்ஜெட் இது.

விவசாயம், நடுத்தர வர்க்கம், டிஜிட்டல் உள்ளிட்ட பல தரப்பட்ட கோணங்களில் போடப்பட்ட பட்ஜெட். டிஜிட்டல் பொருளாதாரதிற்கும் பெரும் பங்கு வகிக்க உள்ளது இந்த பட்ஜெட். இளைஞர் திறன் மேம்பாட்டுக்கு சிறந்த பட்ஜெட் இது. இந்த 9 ஆண்டுகளில் இந்தியா பேரும் தூரம் பயணம் செய்துள்ளது..65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயணம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாடர்ன் பட்ஜெட் இந்தியாவை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஜிஎஸ்டி தொடர்பாக பட்ஜெட்டில் இல்லாதது தொடர்பான கேள்விக்கு அது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவு என பதில். அரசியல் அல்லாத வளர்ச்சி காணவே பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். 

அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை. வளர்ச்சியை பார்த்து மக்களே வாக்களிப்பர்.டிஜிட்டல் பொருளாதாரதிற்கும் பெரும் பங்கு வகிக்க உள்ளது இந்த பட்ஜெட். இளைஞர் திறன் மேம்பாட்டுக்கு சிறந்த பட்ஜெட் இது. இந்த 9 ஆண்டுகளில் இந்தியா பேரும் தூரம் பயணம் செய்துள்ளது..65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயணம் வளர்ச்சி கண்டுள்ளது.இந்த மாடர்ன் பட்ஜெட் இந்தியாவை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.ஜிஎஸ்டி தொடர்பாக பட்ஜெட்டில் இல்லாதது தொடர்பான கேள்விக்கு அது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவு என பதில். அரசியல் அல்லாத வளர்ச்சி காணவே பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை. வளர்ச்சியை பார்த்து மக்களே வாக்களிப்பர்.

அதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில், கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய இணை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கோவையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் சூழலில் திறன் மிகுந்த பணியாளர்களை உருவாக்குவதும் மிகவும் அவசியம் என கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசுகையில், 'பாரத பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு தொழில் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், சோதனை அடிப்படையில் கோவையிலிருந்து துவங்கப்படும் என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

மேலும் பேசியவர், 'கடந்த 9 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் என அனைத்து தரப்பு தொழில்துறையினரும் வளர்ச்சி அடையும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதும் தொழில் நிறுவனங்களின் முக்கிய கடமையாகும். அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்த மத்திய அரசு வழிவகுக்கும்' என தெரிவித்தார்.

தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தொழில்துறையினர் தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை மத்திய இணை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வுகளை அடுத்து இன்று மாலை மத்திய இணை அமைச்சர் கோவையில் இருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார்.

click me!