வரலாற்றை தெரிந்து கொள்வற்கான ஆர்வம் இளம் தலைமுறைக்கு ஆர்வம் இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வரலாற்றை தெரிந்து கொள்வற்கான ஆர்வம் இளம் தலைமுறைக்கு ஆர்வம் இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு (ம) பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்பு சங்க இலக்கியங்கள் தோன்றியதற்கு முன்பு உருவானது தமிழ் மொழி. அந்த தமிழர்கள் அன்றைய கால கட்டத்திலேயே தமிழ்நாடு என அழைத்துள்ளனர். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை தொடங்குவது, அழைத்து வருவது, மத்திய பட்ஜெட் துவங்குவதற்கு முன் குடியரசுத்தலைவரின் உரை எல்லாம் மரபு தான்.
இதையும் படிங்க: சொத்துவரியை உடனே செலுத்த வேண்டும்... சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!!
மரபு என்பது சட்டங்களை தாண்டி இருக்கும், சட்டங்களைப்போன்றே பின்பற்றி கொண்டுவரக்கூடிய ஒன்று. திருவள்ளுவூர் அதிரம்பாக்கம் என்ற பகுதியில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் இனம் என்ற இனம் தோன்றியிருக்கிறது. பட்டறை பெரும்புதூர் என்ற ஊரில் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழர் இனம் வாழ்ந்து கொண்டிருப்பதோடு இன்றழவும் அதன் படிநிலைகளை விட்டு சென்ற ஊராக பட்டறை பெரும்புதூர் இருக்கிறது. பொன்னியின் செல்வம் திரைப்படம் குறித்து பேசியவர், பொன்னியின் செல்வன் உண்மையான புனைவும் கலந்து வரலாற்று ஆளுமைகளை எடுத்துச்சொல்கிற புதினத்தை பார்க்கிறதில் ஆர்வம் உள்ளதோடு வரலாற்றை தெரிந்து கொள்வற்கான ஆர்வம் இளம் தலைமுறைக்கு ஆர்வம் இருக்கிறது.
இதையும் படிங்க: அனைத்து துறை ஒப்புதலுக்கு பின்னரே பேனா சின்னம் அமைக்கப்படும்... தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்!!
பல்வேறு அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும்போது வராது ஆர்வம் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கபட்ட திரைப்படத்தை பார்க்கும் போது ஆர்வம் வருகிறதென்கால் நமது வரலாறை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இளம் தலைமுறைக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. பொன்னியின் செல்வன் நடந்த இடத்திற்கு இன்று பலர் செல்கின்றனர். அதேபோன்று கீழடிக்கு உலகளாவிய இருக்கூடிய இளைஞர்கள் வந்து கொண்டுள்ளார்கள். கீழடிக்கு கொஞ்சம் கூட குறைந்து விடாத ஊராக கொங்கு மண்டலத்தில் கொடுமணல் உள்ளது. அங்கு எடுக்கபட்ட பானைகளில் உள்ள எழுத்துக்கள் மிக அரிதாக இருக்கிறது. மிகப்பெரிய தொழிற்சாலை நடத்திய இருக்கூடிய ஊராகவும் இருக்கிறது. அது நொய்யல் நதி நாகரீத்தில் அது நிலவி இருக்கிறது. வரலாற்று திணிக்கபடுவதற்கு எதிராக மட்டுமல்ல, வரலாறு மறைக்கபடுவதற்கு எதிராகவும் நாம் நமது போரை துவங்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.