கோவை மாவட்டம் சூலூர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அண்ணமடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் அஜய் வயது 19. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது நண்பர் ராஜ்குமார் என்பவருடன் ராசி பாளையம் பகுதியில் மற்றொரு நண்பரை பார்க்க வேண்டும் என கூறி அஜய் ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது ராஜ்குமாரை ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு அஜய் மட்டும் நண்பரைப் பார்த்து வருவதாக கூறிக்கொண்டு ரயில்வே ட்ராக் பகுதிக்கு சென்று விட்டார்.
நீண்ட நேரமாகியும் அஜய் வராததால் அவரது நண்பர் ராஜ்குமார் ரயில் பாதையில் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது அங்கு அஜய் மற்றும் ராசி பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவி ஒருவரும் ரயிலில் அடிபட்டு துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்து ராஜ்குமார் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். அப்பொழுது அருகில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
தென்னிந்திய அழகி போட்டி; 2 குழந்தைகளின் தாயான கோவை பெண் பட்டம் வென்று அசத்தல்
இதனை தொடர்ந்து உடனடியாக போத்தனூர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த ரயில் காவல் துறையினர் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவியும், கல்லூரி மாணவனும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவனக்குறைவாக குழந்தையுடன் சாலையை கடந்த பெண் விபத்தில் தூக்கி வீசப்பட்ட காட்சி