Asianet News TamilAsianet News Tamil

தென்னிந்திய அழகி போட்டி; 2 குழந்தைகளின் தாயான கோவை பெண் பட்டம் வென்று அசத்தல்

டெல்லியில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் கோவையை சேர்ந்த மருத்துவர் அபிராமி தென்னிந்திய அழகிக்கான பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

coimbatore skin doctor won mrs south india title in delhi
Author
First Published Feb 1, 2023, 6:51 PM IST

டெல்லியை சேர்ந்த (MIQH) நிறுவனம் திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கான அழகி மற்றும் ஆண்களுக்கான அழகன் போட்டியினை கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடத்தியது. இதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா என தென்னிந்தியாவில் உள்ள பல்வேரு மாநிலங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர். இதில் கோவையை சேர்ந்தவரும், மருத்துவருமான அபிராமி தென்னிந்திய திருமணமானவர்கள் பிரிவில் அழகி பட்டம் வென்று அசத்தியுள்ளார். 

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த அபிராமி அதே பகுதியில் தோல் நோய் தொடர்பான மருத்துவமனையை நடத்தி வருகிறார். முக அலங்காரத்தில் ஆர்வமிக்க அபிராமி மருத்துவராக இருந்தாலும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் கண்டிருக்கிறார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தவர், மருத்துவராக இருந்தாலும் தான் பணியாற்றும் தோல் மருத்துவம் துறையுடன் இணைந்து வருவது தான் அழகுக்கலையும் தனக்கு அழகுக்கலையில் இருந்த ஆர்வமே தன்னை அழகிப்போட்டியில் கலந்துகொள்ள தூண்டியது, திருமணமான பெண்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்க வேண்டுமென்பது அல்ல. தங்களுக்கு பிடித்தமான துறையில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். 

அதற்கு குடும்பத்தினரும் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தனக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில் மருத்துவ பணியை செய்து கொண்டு பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் உடற்பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை பின்பற்றியதோடு அல்லாமல் தனக்கான தனித்திறணையும் வளர்த்துக்கொண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் பெண்கள் யாராக இருந்தாலும் தங்களுக்கான திறமைகளை வளர்த்திக்கொண்டால் அதுவே அவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும். சமூக வலைதளங்களில் குறைந்த நாட்களில் முகப்பொலிவு, முக அழகு பெறலாம் என்ற வீடியோக்கள் வருவது என்பது மருந்துகள் உபயோகபடுத்த ஒரு விளம்பரமே. முகத்தில் உள்ள ஒரு கரும்புள்ளியை நீக்கவே சில மாதங்கள் ஆகும். ஆனால் குறைந்த நாட்களில் முகம் அழகு பெறும் என்பது சாத்தியற்றது. அதுபோன்ற விடியோக்களில் வரும் தகவல்களை பின்பற்றினால் அதுவே உங்களது தோலுக்கும், அழகிற்கும் ஆபத்தாக அமையும் எனவும் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios