பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தனி படை… கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை!!

By Narendran SFirst Published Feb 2, 2023, 9:18 PM IST
Highlights

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தனி படை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். 

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தனி படை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் இருந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை, ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு ஒன்றிணைந்து விழா நடத்திய கிராம மக்கள்

வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு, முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாவது 15 ஆயிரம், மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு முதன் முறை, ரூ.1,000, இரண்டாவதாக, ரூ.2,000, மூன்றாவதாக, ரூ.5,000-ம், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவதாக, ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 விதிக்க விதி முறை உள்ளது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன. 

இதையும் படிங்க: திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழை எச்சரிக்கையை அடுத்து ஆட்சியர் அறிவிப்பு!!

இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கிடங்குகள், கடைகள் உள்ளிட்டவற்றில்ஆய்வு செய்துஅபராதம் விதிக்க தனிப்படை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, பிளாஸ்டிக் நோடல் அலுவலராக, சலேத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை நோடல் அலுவலரின், 94894-57403 என்ற செல்போன் எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தனிப்படையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட் டோர் இடம்பெற்று உள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதனால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

click me!