Coimbatore Metro: கோவை மெட்ரோ திட்டம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ. அப்டேட்!

By SG BalanFirst Published Feb 4, 2023, 6:41 PM IST
Highlights

2011ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் செயலுக்கு வராமல் உள்ள நிலையில், ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவல்கள் அதிருப்தி அளிப்பவையாக உள்ளன.

மத்திய அரசு 2011ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்த மத்திய முடிவு செய்தது. அப்போது கோவையுடன் சேர்ந்து தேர்வான கொச்சி போன்ற நகரங்களில்கூட மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் கோவையில் மெட்ரோ ரயில் பயணம் கனவாகவே உள்ளது.

இந்நிலையில் இப்போது அவிநாசி சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கான உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. மெட்ரோ திட்டத்தைக் காரணம் காட்டி சிங்காநல்லுார், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி பகுதிகளில் அமையவிருக்கும் மேம்பால திட்டப் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்துள்ள தகவல்கள் இத்திட்டம் செயலாக்கப்படுவது பற்றி சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மெட்ரோ சேவையை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் குழு கடந்த ஆண்டு நவம்பரில் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையிலிருந்து துவக்கம் - அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

கோவையில் முதல் கட்டமாக, ரூ.9,424 கோடி மதிப்பீட்டில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45.3 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளலுார் பேருந்து முனையத்தில் இருந்து, உக்கடம் - அவிநாசி சாலை வழியாக, நீலாம்பூர் பி.எஸ்.ஜி. பவுண்டரி வரை உள்ள 31.2 கி.மீ. தொலைவில் முதல் வழித்தடமும் கலெக்டர் அலுலவகத்தில் இருந்து சத்தி ரோடு வழியே வளியாம்பாளையம் பிரிவு வரை உள்ள 14.1 கி.மீ., தூரத்தில் இரண்டாவது வழித்தடமும் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் அவிநாசி சாலையில் மெட்ரோ திட்டம் அவசியமா என்பதைப்பற்றி ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சாலையில் தரையிலோ, மேம்பாலத்தின் இடப்புறமோ, தனியாகவோ மெட்ரோ ரயில் அமைப்பது பற்றி ஆய்வு செய்யும்படிக் கூறப்பட்டுள்ளது.

வழித்தடத்தின் தொடக்கப் புள்ளியான வெள்ளலூர் பேருந்து முனையமே கட்டி முடிக்கப்படாத சூழலில், கோவைக்கு மெட்ரோ ரயில் வசதி சீக்கிரத்தில் வருவதற்கு வாய்ப்பே இல்லை போல் தெரிகிறது.

தனது பேரக் குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி; சேலத்தில் பரபரப்பு

click me!