Asianet News TamilAsianet News Tamil

தனது பேரக் குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி; சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் மனநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் பெண் தனது 4 வயது பேத்தியை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

mentally challenged lady killed her own granddaughter in salem
Author
First Published Feb 4, 2023, 6:04 PM IST

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் விமல்குமார், மேகலா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் மதுபிரித்திகா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 45 தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. புதிதாக குழந்தை பிறந்துள்ளதால் மதுபிரித்திகா செவ்வாபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

தனது குழந்தைகளின் துணியை காய வைப்பதற்காக மேகலா மாடிக்கு சென்றபோது திடீரென தனது 4 வயது மகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேகமாக இறங்கி வந்த அவர் மகளை தேடியுள்ளார். ஆனால், 4 வயது மகளும், தனது அம்மா சாந்தியும் ஒரு அறையில் இருக்கும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு சென்று பார்த்தார். கதவு பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது சாந்தி பேரக்குழந்தையான மதுபிரித்திகாவின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெதரிவித்தனர்.

செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

மேலும் குழந்தையின் கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை

காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சாந்தியின் மற்றொரு மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், அப்போது முதல் அவர் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நடந்துகொள்வதாகவும், இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios