மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்

Published : Feb 20, 2023, 09:58 AM IST
மேட்டுப்பாளையத்தில் முதல் முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்

சுருக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இறந்தவரின் தோல் தானமாக பெறப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 31). அப்பகுதியில் உள்ள துணி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நாகராஜின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மருத்துவமனையில், நாகராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க விரும்புவதாக அவரது தாயார் தெரிவித்தார். மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை தோல் தானமாக பெறப்பட்டது கிடையாது. இந்நிலையில், நாகராஜின் தோல் தானமாக பெற முடிவு செய்யப்பட்டது. அதற்கும் அவரது தாயார் சம்மதம் தெரிவித்தார்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அசையும் சொத்துக்கள் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நாகராஜின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. அதே போன்று அவரது தோலும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. உடல் உறுப்புகள் அரசில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களது முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மேலும் தீக்காயம், விபத்து உள்ளிட்ட பாதிப்புகளால் தோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு தோல் தானமாக வழங்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நிறுத்த வேண்டும்.! திமுகவிற்கு எதிராக சீறும் பிரேமலதா விஜயகாந்த்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?