“குடியரசுத்தலைவர் வருகை” மதுரை, கோவையில் பாதுகாப்பு ஒத்திகை

By Velmurugan sFirst Published Feb 17, 2023, 7:47 PM IST
Highlights

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ் நாட்டிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு மதுரை மற்றும் கோவையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

நாளை பகல் 12 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விமானம் மூலமாக வருகை தரும் குடியரசு தலைவர் விமானநிலையத்தில் இருந்து காரில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி  5 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 

மீனாட்சியம்மன் கோவிலில், விமான நிலையம் மற்றும் வில்லாபுரம் மேம்பாலம், விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரையிலான சாலைகளிலும் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Latest Videos

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளிலும், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம்  பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் வருகை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் வரைக்கும் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையின் பொழுது குடியரசுத் தலைவர் வரும் வாகனம் போன்றும் அதே போன்று பாதுகாப்பு வாகன அணி வகுப்பு போன்று நடத்தப்பட்டு குடியரசுத் தலைவரின் நாளைய நிகழ்ச்சி குறித்தான ஒத்திகை நடத்தப்பட்டது.

இதே போன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவரத்திரி நிகழ்ச்சியிலும் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு கோவையிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.

click me!