கோவை நீதிமன்ற வளாகத்தில் கோகுல் என்பவர் கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
கோவையில் குற்ற வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராக வந்த ஒருவரை வெட்டி கொன்ற குற்றவாளிகளை மேட்டுப்பாளையம் கோத்திகிரி சாலையில் இருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில் வழக்கில் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் தொடர்புடைய ஜோஸ்வா மற்றும் கவுதம் ஆகிய இருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!