கோவை மாநகரில் அடுத்தடுத்து கொலை.. காவல்துறை எடுத்த அதிரடி - போலீசார் தீவிர பாதுகாப்பு !!

By Raghupati R  |  First Published Feb 13, 2023, 10:00 PM IST

டிராவல் ஏஜென்சி நடத்தி வாடிக்கையாளர்களிடம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர் கோவை போலீஸ்.


இது தொடர்பாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்.

அப்போது பேசிய அவர், கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தேனியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விஜிஎம் டிராவல்ஸ் என்ற பெயரில் போலியாக ட்ராவல் ஏஜென்சி நிறுவனம் துவங்கி அதன் அடிப்படையில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் மாத வாடகைக்கு கார் எடுத்து மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக பொய்யான தகவல் கூறி 30க்கும் மேற்பட்ட கார்களை வாங்கி தலைமறைவானார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

அது தொடர்பாக காரின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த சூழலில் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 11 கார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 19 கார்கள் விரைவில் மீட்கப்படும் என்று கூறினார்.

வாடிக்கையாளர்களின் கார்களை வாங்கி அந்தக் கார்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்று வெங்கடேஷ் மோசடியில் ஈடுபட்டு வந்தார். கோவை மாநகரில் நேற்றும் இன்றும் நடைபெற்ற அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பி செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

நாளை கோவை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் 34 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே உள்ள போலீசாருடன் ஆயிரம் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகாசிவராத்திரி விழா வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில்களில் மக்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த கஞ்சா சாக்லேட்டுகள் வடமாநிலத்தில் இருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது. கான்பூரில் கஞ்சா சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டு, இதனை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க..பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?

இதையும் படிங்க..மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

click me!