கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். மேலும் கல்லூரியில் தோட்ட பணி, உணவகம் உள்ளிட்ட பணிகளுக்காக வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி உணவகத்தில் மாணவர்களும், வடமாநில தொழிலாளர்களும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவரை கேளி செய்ததாகக் கூறப்படுகிறது.
உயரம் மட்டும் தான் சிறுசு; எங்களுக்கு தைரியம் ரொம்ப பெருசு: ஆட்சியரிடம் மனு அளித்த 3 வயது சிறுமி
இதனைத் தொடர்ந்து அந்த மாணவி இது குறித்து தனது நண்பரிடம் முறையிட்டுள்ளார். உடனடியாக அந்த மாணவரும் வட மாநில தொழிலாளரை அழைத்து இது குறித்து கேட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் தான் மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாநில அளவிலான கபடி போட்டி; வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த நடிகர் கிங்காங்
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.