உயர்த்தப்பட்ட கோவை-பெங்களூர் ஆம்னி பேருந்து டிக்கெட் விலை… அதிர்ச்சியில் பயணிகள்!!

By Narendran S  |  First Published Feb 19, 2023, 11:33 PM IST

கோவையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


கோவையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இது தொடர்பாக மக்களின் புகார்கள் அதிகரித்ததை அடுத்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (டிஎன்பிஓஏ), கட்டண உயர்வுப் பட்டியலை வெளியிட்டது.

இதையும் படிங்க: திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?

Latest Videos

undefined

இருந்தபோதிலும் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கோவையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை ஏற்றப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!

கோவையிலிருந்து ஆம்னி பேருந்துகள் தினம் தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு தினசரி ஆம்னி பேருந்துந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தான் கோவையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலை 1500 ரூபாயில் இருந்து 3050 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!