மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.

01:28 PM (IST) Dec 15
மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப் பலகை பாதை சேதமடைந்ததையடுத்து சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை திறக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
12:57 PM (IST) Dec 15
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்களுக்கு சம்மான அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிநாட்டை பொறுத்தவரை விஜய்யின் வாரிசு படம் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது வெளிநாட்டில் ஆரம்பமாகி உள்ள முன்பதிவில் வாரிசு திரைப்படம் தான் அதிகளவு வசூல் செய்துள்ளது. மேலும் படிக்க
12:34 PM (IST) Dec 15
சென்னையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அறையில் தூங்கி கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:51 AM (IST) Dec 15
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 37-ஆவது பலி ஏற்பட்டுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
11:47 AM (IST) Dec 15
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
11:01 AM (IST) Dec 15
பாபா படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி, கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளை மாற்றியமைத்து ரஜினியின் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், பாபா படம் ரீ-ரிலீஸிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
10:22 AM (IST) Dec 15
சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். தன் குடும்பத்தின் கைகளில் மட்டுமே அரசு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் ஸ்டாலின் செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
09:23 AM (IST) Dec 15
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு உதயநிதிக்கு 10 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
09:12 AM (IST) Dec 15
ஸ்டாலினை அமைச்சராக்குவதை, கருணாநிதி பொறுமையாகக் கையாண்டார். ஆனால், ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக அறிவித்தது ஏன் என தெரியவில்லை என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
09:11 AM (IST) Dec 15
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வருகிறது.
09:03 AM (IST) Dec 15
இன்று அதிகாலை ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தரிசனம் செய்து முடித்த பின்னர் ரஜினிக்கு தீர்த்த பிரசாதங்களை தேவஸ்தான ஊழியர்கள் வழங்கினர். மேலும் படிக்க
08:03 AM (IST) Dec 15
திமுக ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை,நேர்மையும் இல்லை, சத்தியம் இல்லை, தமிழகத்தை இருளில் மூழ்கடித்து தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டி விட்டு தாய் தமிழ்நாட்டு பிள்ளைகளை கைவிட்டார் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
08:00 AM (IST) Dec 15
சென்னையில் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி கருக்கா சுரேஷ் ஒட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:59 AM (IST) Dec 15
உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம், நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் கூறியுள்ளார்.
07:51 AM (IST) Dec 15
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.