
இந்த முறை தமிழகத்தில் சற்று முன்னதாகவே வடகிழக்கு பருவமழை துவங்கியது. பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் தான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட முன்னதாக அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்தே பருவமழை தமிழகத்தில் துவங்கியது. ஆனால் சென்னையை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிலான மழை இல்லை என்றே கூறலாம். ஆனால் கிட்டத்தட்ட 1 மாத காலத்திற்கு பிறகு இப்பொது மீண்டும் சென்னை மற்றும் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று நவம்பர் 26ம் தேதி தொடங்கி எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை போன்ற பகுதிகளிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
இதனடையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாக வலுபெற இருக்கிறது. இதற்கு "ஃபெங்கல்" என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புயலாக வலுபெறும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை நாளை முதல் எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக ஏற்கனவே புதுவை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை சென்னை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் நாளை நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடிச்சு ஊத்தும் கனமழை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?