MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடிச்சு ஊத்தும் கனமழை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

அடிச்சு ஊத்தும் கனமழை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 26 2024, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Fengal Cyclone

Fengal Cyclone

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்ந்து, நாளை  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Tamilnadu Rain

Tamilnadu Rain

அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

35
Rain News

Rain News

அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

45
Cuddalore School Holiday

Cuddalore School Holiday

இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. 
இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

55
School College Holiday

School College Holiday

ஏற்கனவே கனமழை பெய்து வருவதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
Recommended image2
Now Playing
எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
Recommended image3
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved