எனது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க சொன்னீங்க.. இப்ப என்ன சொல்றீங்க.. ஸ்டாலினை சீண்டும் தினகரன்.!

கடல் போன்ற அதிமுக இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டாரக் கட்சி ஆகிக் கொண்டிருக்கிறது. 

You said that none of my successors will join politics...ttv dhinakaran

ஸ்டாலினை அமைச்சராக்குவதை, கருணாநிதி பொறுமையாகக் கையாண்டார். ஆனால், ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக அறிவித்தது ஏன் என தெரியவில்லை என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்;- அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிரிவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு பிரிவாகவும் இருக்கிறார்கள். அதிமுக என்பது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வலுவாக போட்டியிடுகிற கட்சியாக இருந்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும் வட்டார கட்சியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தனது குமுறல்களை வெளிப்படுத்தினார். 

இதையும் படிங்க;- சந்தில் சிந்து பாடும் ஜெயக்குமார் ஒரு ஆளே இல்ல.. இறங்கிய அடிக்கும் டிடிவி.தினகரன்.. !

You said that none of my successors will join politics...ttv dhinakaran

கடல் போன்ற அதிமுக இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டாரக் கட்சி ஆகிக் கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் சமுதாய கட்சியாகவும் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஸ்டாலின் முதன்முறையாக எம்.எல்.ஏ ஆனார். அப்போது, அவசரகதியில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அமைச்சராக இருந்தனர். 

You said that none of my successors will join politics...ttv dhinakaran

ஸ்டாலினை அமைச்சராக்குவதை, கருணாநிதி பொறுமையாகக் கையாண்டார். ஆனால், ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக அறிவித்தது ஏன் என தெரியவில்லை. என் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஸ்டாலின் முன்பு தெரிவித்தார். தற்போது, சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வருங்காலத்தில் ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதல்வர்கள்கூட அறிவிப்புகளை வெளியிடலாம் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இது தான் நடக்கும்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios