Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் சூதாட்டத்தால் 15 நாட்களில் 5 வது உயிரிழப்பு.! ஆளுநர் ஒப்புதல் தராதது சரியில்லை.! அன்புமணி ஆவேசம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 37-ஆவது பலி ஏற்பட்டுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Anbumani has urged the governor to approve the online gambling ban bill
Author
First Published Dec 15, 2022, 11:47 AM IST

ஆன்லைன் சூதாட்டம்- தொடரும் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் உயர்பலி ஏற்பட்டு வருகிறது. இது வரை 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாமக தலைவர் அன்புமணி,  கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை  இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த  15 நாட்களில் மட்டும்  5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ளனர்!

தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு.! சீனியர்களை பின்னுக்கு தள்ளிய உதயநிதி.! எத்தனையாவது இடம்.?

Anbumani has urged the governor to approve the online gambling ban bill

ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுனர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது! ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுனர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது! ஆளுனரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுனரை சந்தித்து  ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பிளாக் ஷீப் சேனலில் மர்ம மரணம்.! தமிழகத்தில் தொடரும் கொலைகள்.!கனவு உலகில் மணல் கோட்டை கட்டும் ஸ்டாலின்- இபிஎஸ்
 

Follow Us:
Download App:
  • android
  • ios