தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதில், இந்த தொடரில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை நிற பந்துகள் என்று சொல்லப்படும் ஒயிட்பால் கிரிக்கெட் தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர்களில் இருவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.
டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ராஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாறாக இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், துணை கேப்டன் யார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிகப்பட்டுள்ளார். மேலும், சுப்மன் கில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இது தவிர தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியானது 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டியிலும், 3 நாட்கள் கொண்ட இந்திய அணிக்கு இடையிலான போட்டியிலும் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏ அணி முதல் 4 நாட்கள் போட்டி:
சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன்*, தேவ்தத் படிக்கல், பிரதோஷ் ரஞ்சன் பால், சர்ஃபராஸ் கான், கேஎஸ் பரத் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல், ஷர்துல் தாக்கூர், புல்கித் நராங், சௌரப் குமார், மனவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வத் காவேரப்பா, துஷார் தேஷ்பாண்டே.
அபிமன்யூ ஈஸ்வரன் உடல் தகுதியைப் பொறுத்து அணியில் இடம் பெறுவார்.
இந்திய அணிக்கிடையிலான 3 நாட்கள் கொண்ட போட்டி:
ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஷ்வா, சுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன்*, தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், புல்கித் நராங், ஹர்ஷித் ராணா, ஷர்துல் தாக்கூர், சௌரப் குமார், மனவ் சுதர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், வித்வாத் காவேரப்பா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, நவ்தீப் சைனி.
இந்தியா ஏ அணி 2ஆவது 4 நாட்கள் போட்டி:
சாய் சுதர்சன், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, கேஎஸ் பரத் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஆகாஷ் தீப், வித்வாத் காவேரப்பா, நவ்தீப் சைனி.
இந்தியா ஏ – தென் ஆப்பிரிக்கா – ஏ அட்டவணை:
டிசம்பர் 11 – 14: திங்கள் கிழமை – முதல் நான்கு நாட்கள் போட்டி
டிசம்பர் 20 – 22: புதன் கிழமை – 2ஆவது 3 நாட்கள் கொண்ட போட்டி (இந்திய அணிக்கிடையில்)
டிசம்பர் 26 – 29: செவ்வாய்க்கிழமை – 3ஆவது நான்கு நாட்கள் கொண்ட போட்டி
Notes:
இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்:
டிசம்பர் 10 – ஞாயிறு – முதல் டி20 – டர்பன்
டிசமப்ர் 12 – செவ்வாய் – 2ஆவது டி20 – கியூபெர்ஹா
டிசம்பர் 14 – வியாழன் – 3ஆவது டி20 – ஜோகன்னஸ்பர்க்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்:
டிசம்பர் 17 – ஞாயிறு – முதல் ஒருநாள் கிரிக்கெட் – ஜோகன்னஸ்பர்க்
டிசமப்ர் 19 – செவ்வாய் – 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் – கியூபெர்ஹா
டிசம்பர் 21 – வியாழன் – 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் – பார்ல்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:
டிசம்பர் 26 – 30 செவ்வாய் – முதல் டெஸ்ட் போட்டி – செஞ்சூரியன்
03-01-2024 முதல் 07-01-2024 வரை – புதன் – 2ஆவது டெஸ்ட் – கேப் டவுன்