ஷாருக் கானுக்காக ரூ.13 கோடி வரையில் ஏலம் எடுக்க சிஎஸ்கே, ஜிடி கடுமையாக போட்டி போடும் – ரவிச்சந்திரன் அஸ்வின்!

By Rsiva kumarFirst Published Nov 29, 2023, 4:24 PM IST
Highlights

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் 2024 ஏலத்தில் உரிமையாளர்கள் எவ்வாறு வியூகம் வகுக்கக்கூடும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில், அனைவரது கவனம் முழுவதும் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 17ஆவது ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Rahul Dravid contract: டி20 உலகக் கோப்பையை குறி வைத்த பிசிசிஐ: ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Latest Videos

பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் அந்தந்த அணிகளால் விடுவிக்கப்பட்ட நிலையில், மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூ போன்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களும் தக்க வைக்கப்படவில்லை. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் 2024 ஏலத்தின் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் எவ்வாறு வியூகம் வகுக்கக் கூடும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரரான ஷாருக் கான் குறித்து பேசியுள்ளார்.

ஜெர்சி நம்பர் 7: எம்.எஸ். தோனி 0007 என்ற நம்பர் பிளேட் கொண்ட மெர்சிடிஸ் ஜி கிளாஸ் கார் ஓட்டும் வீடியோ வைரல்!

நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஷாருக் கான் 14 போட்டிகளில் விளையாடி 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியாவை கைவிட்டுவிட்டது. இன்னிங்ஸை முடித்துக் கொடுக்கும் வகையில் பவர் பிளேயர் குஜராத் அணிக்கு தேவை. அப்படிப்பட்ட ஒருவர் தான் ஷாருக் கான். பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷாருக் கானை அடுத்த மாதம் ஏலத்தில் எடுப்பதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியானது ரூ.12 முதல் ரூ.13 கோடி வரையில் செலவு செய்யலாம்.

MS Dhoni Autograph Video: ரசிகரின் சூப்பர் பைக்கை நல்லா தொடச்சு, ஆட்டோகிராஃப் போட்ட தோனி – வைரலாகும் வீடியோ!

இதற்கு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.13 கோடி வரையில் செலவு செய்யலாம். சிஎஸ்கே அணியில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லை. ஆதலால், ஷாருக் கானை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணியானது போட்டியில் இறங்கும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் - தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார், பிராப்ம்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிகந்தர் ராஸா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைடு, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ், சாம் கரண், கஜிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வாத் கவேரப்பா, ஷிவம் சிங்.

பஞ்சாப் கிங்ஸ் - விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

மொகித் ரதீ, ராஜ் பவா, ஷாருக் கான், பனுகா ராஜபக்சா, பல்தேஜ் சிங்

India vs South Africa ODI Series: நான் விளையாடமாட்டேன், எனக்கு ஓய்வு வேண்டும் – அடம் பிடிக்கும் விராட் கோலி!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாகர், டெவான் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்கியா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலாங்கி, மகீஷ் தீக்‌ஷனா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசாண்டா மகாலா

குஜராத் டைட்டன்ஸ்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

டேவிட் மில்லர், சுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், விருத்திமான் சகா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்சன் நீல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேதியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷீத் கான், ஜோசுவா லிட்டில், மொகித் சர்மா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

யாஷ் தயாள், கேஎஸ் பரத், ஷிவம் மவி, உர்வி படேல், பிரதீப் சங்வான், ஓடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், தசுன் ஷனாகா.

ஆர்வக் கோளாறால் அக்‌ஷர் படேலுக்கு நோபால் வாங்கி கொடுத்த இஷான் கிஷான் – இந்தியாவின் தோல்வி ஸ்டார்ட்டிங்!

click me!