இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

By Rsiva kumarFirst Published Jan 6, 2023, 11:07 AM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு ஆகும்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதோடு, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 1-1 என்று சமநிலை செய்தது. இந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி செய்த தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

இந்தியாவின் 79ஆவது கிராண்ட் மாஸ்டரான 15 வயதான தமிழக செஸ் வீரர் பிரனேஷ்!

மிஸ்டேக்ஸ் 1:

டாஸ் வென்ற இந்திய கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தது தவறு. கடந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் ஆடியிருக்க வேண்டும்.

மிஸ்டேக்ஸ் 2:

ஹர்திக் பாண்டியா 2 ஓவர் மட்டுமே வீசியது தவறு. தொடர்ந்து ஷிவம் மாவி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஓவர்கள் வழங்கியது தவறு. அர்ஷ்தீப் சிங் தான் நோ பால் போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று தெரிகிறது. அப்போ அவருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்திருக்கலாம். நேற்றைய போட்டியில் மட்டும் அர்ஷ்தீப் சிங் 5 நோ பால் வீசியிருக்கிறார். உம்ரான் மாலிக் ஒரு நோ பால், ஷிவம் மாவி ஒரு நோ பால் என்று அள்ளிக் கொடுத்துள்ளார். மொத்தம் வீசப்பட்ட 7 நோ பால்களில் கிட்டத்தட்ட 50 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!

மிஸ்டேக்ஸ் 3:

ஷிவம் மாவி ஓவர்களில் இலங்கை அணி நன்றாக அடித்து ஆடுகிறார்கள் என்று தெரிந்தும், கடைசி ஓவரை அவருக்கு கொடுத்தது தவறு. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா வீசியிருக்கலாம். கடைசி ஓவரில் மட்டும், 20 ரன்கள் கொடுக்கப்பட்டது. 19ஆவது ஓவரில் 17 ரன்னும், 20 ஓவரில் 20 ரன்னும் என்று மொத்தமாக 37 ரன்கள் கொடுக்கப்பட்டது. 

மிஸ்டேக்ஸ் 4:

அர்ஷ்தீப் சிங் வீசிய 19ஆவது ஓவரில் மட்டும் 2 நோ பால் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

மிஸ்டேக்ஸ் 5:

கடந்த முதல் டி20 போட்டியில் 160 ரன்கள் அடிக்கவே திணறிய இலங்கை அணியை 206 ரன்கள் அடிக்கவிட்டது பெரிய தவறு. இதற்கு நோ பாலும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்திய அணியின் மோசமான பௌலிங்கும் அப்படி அமைந்துவிட்டது. கடந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட் கைப்பற்றிய ஷிவம் மாவி இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்துள்ளார்.

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

மிஸ்டேக்ஸ் 6:

கடந்த போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமான ஷும்பன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு தொடக்க வீரராக இருந்து கொண்டு இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினால், இந்திய அணியின் நிலைமை என்ன? தொடக்க வீரர்கள் குறைந்தது 60, 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுக்க வேண்டும் அல்லவா? இதனை இந்திய அணி வீரர்கள் செய்ய தவறுவது ஏன்?

மிஸ்டேக்ஸ் 7:

இந்திய அணி 9.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 57 ரன்கள் எடுத்தது தவறு. தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கலாம். இதே போன்று ஷிவம் மாவி அல்லது அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக முகேஷ் குமாருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். இப்படி வாய்ப்பே வழங்காமல் அணியில் உட்கார வைத்திருப்பதற்குப் பதிலாக ஒரேயொரு போட்டியில் அவருக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்.

2023 ஆசிய கோப்பை: ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான்..! 2023 - 2024ம் ஆண்டுக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

மிஸ்டேக்ஸ் 8:

தீபக் கூடா ஒரு ஆல்ரவுண்டர் தான் அல்லவா. அப்போ அவருக்கும் பந்து வீசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒரே ஒரு ஓவர் கொடுத்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அதை வைத்து அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கலாமே....

இப்படி எல்லாவற்றிலும் இந்திய அணி கோட்டை விட்டு தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த போட்டியில் எப்படியோ இந்திய அணி ஜெயித்துவிட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஜெயித்திருந்தால் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கும். ஆனால், விதி விளையாடிவிட்டது. இலங்கை அணி சிறப்பாக பந்து வீசும் போது, இந்திய அணியால் மட்டும் ஏன் அவ்வாறு பந்து வீச முடியவில்லை என்ற கேள்வி அனைவரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது.

ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்

click me!