BAN vs SL: சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா நிதான ஆட்டம்; தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை சாதனை!

By Rsiva kumar  |  First Published Aug 31, 2023, 10:09 PM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த 2ஆவது லீக் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தும் 16ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அதிகபட்சமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம்:

Tap to resize

Latest Videos

முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித்  ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிஜுர் ரஹ்மான்,

இலங்கை:

பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, மத்தீஷா பதிரனா

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

இதையடுத்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது லீக் போட்டியானது இலங்கையிலுள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் மற்றும் தன்சித் ஹசன் இருவரும் வங்கதேச ரன் கணக்கை தொடங்கினர்.

எனினும், தனது முதல் போட்டியில் விளையாடிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் 2ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகமது நைம் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷாகில் அல் ஹசன் 5 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

Asia Cup 2023: தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹூசைன் சாண்டோ; 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய மத்தீஷா பதிரனா!

இதையடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் சாண்டோ நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் மத்தீஷா பதிரனா 7.4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மஹீத் தீக்‌ஷனா 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே மற்றும் தசுன் ஷனாகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிசிசிஐ மீடியா உரிமையை கைப்பற்றிய வையாகாம் 18; ஒரு போட்டிக்கு ரூ.67.8 கோடி வீதம் ரூ.5,996.4 கோடி கொடுத்துள்ளது

ஆனால், அதன் பிறகு வந்த சதீர சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே அரைசதம் அடித்தனர். இதில், சதீர சமரவிக்ரமா 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த தனஞ்சய டி சில்வா 2 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக கேப்டன் தசுன் ஷனாகா களமிறங்கினார்.

அவர் 14 ரன்கள் எடுக்க, அசலங்கா கடைசியாக பவுண்டரி அடித்து இலங்கை அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். அவர், 92 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, இந்த ஆண்டு தொடர்ந்து 11ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!

முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 11 ஆவது வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2004 பிப்ரவரி – ஜூலை 2004ல் 10 முறை வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து, டிசம்பர் 2013 முதல் மே 2014 வரையில் 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Even with four injured players and two down with COVID-19, Sri Lanka triumphed. Their incredible 11-match ODI winning streak, their longest, continues👏👏. pic.twitter.com/DyrNSTV9YS

— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial)

 

click me!