இந்தியா விளையாடும் உலகக் கோப்பை 2023 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையானது தற்போது தொடங்கியுள்ளது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை 2023 தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.
ஆன்லைன் கேமிங் ஆப் விளம்பரத்தில் நடித்ததால் சச்சின் வீடு முற்றுகை!
இந்தப் போட்டியைத் தொடர்ந்து மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து 19ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தான், இந்தியா விளையாடும் போட்டிகள், புனே ஒரு நாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையானது தற்போது தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்தியா, அதற்கு முன்னதாக கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.
உலகக் கோப்பை 2023 மாஸ்டர்கார்டு பயனர்களுக்கான டிக்கெட் அட்டவணை மற்றும் இந்திய போட்டிகள்:
ஆகஸ்ட் 24 அன்று மாலை 6 மணி முதல்: மாஸ்டர்கார்டு விற்பனை - அனைத்து இந்தியா அல்லாத போட்டிகள், பயிற்சி விளையாட்டுகள் தவிர (இப்போது நேரலையில்)
ஆகஸ்ட் 29 மாலை 6 மணி முதல்: மாஸ்டர்கார்டு விற்பனை – பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து இந்திய போட்டிகள்
செப்டம்பர் 14 அன்று மாலை 6 மணி முதல் இந்திய நேரப்படி: மாஸ்டர்கார்டு டிக்கெட் விற்பனை - அரையிறுதி மற்றும் இறுதி
மற்ற அனைத்து பயனர்களுக்கும், இந்தியாவின் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 2023 டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30 முதல் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கும். செயல்முறைக்கான அட்டவணை இதோ:
இந்தியப் போட்டிகள் கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம்: ஆகஸ்ட் 30 அன்று இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்கப்பட்டது.
இந்தியாவின் போட்டிகள் சென்னை, டெல்லி மற்றும் புனே: ஆகஸ்ட் 31 அன்று இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது.
இந்தியா போட்டிகள் தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பை: செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.
பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்திய போட்டிகள்: செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.
இந்தியப் போட்டி அகமதாபாத்தில்: செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.
BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!