ஆன்லைன் கேமிங் செயலி விளம்பரத்தில் நடித்த சச்சின் டெண்டுல்கரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். சமூகத்தின் முழு பகுதியிலும் மதிக்கப்படும் ஒருவராக திகழ்கிறார்.
சச்சின் டெண்டுல்கர், 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் வரையில் குவித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், ஏழை குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் கேம்ஸ் என்ற ஃபேண்டஸி கிரிக்கெட் ஆன்லைன் ஆப் விளம்பர தூதராக சச்சின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த விளம்பரத்திற்காக அவர் நடிக்கவும் செய்துள்ளார்.
இந்த நிலையில், தான் பாரத ரத்னா வென்ற சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமிங் ஆப் விளம்பரத்தில் நடிக்கலாமா? என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் உள்ள சச்சின் டெண்டுல்கரது வீட்டை மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் தலைமையில் ஏராளமானோர் முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
BAN vs SL: வங்கதேச அணியில் அறிமுகமான தன்சித் ஹசன் தமீம்; டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!