இந்திய அணிக்கு கேப்டனாகும் அனைத்து தகுதியும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதிகளும் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு. ஆகையால், அவரை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்திருப்பவர் அஸ்வின்.
செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணி தங்களது பி அணியை அனுப்ப உள்ளதாக நான் அறிகிறேன். இதற்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளது குறித்து தெரிந்து கொண்டேன்.
விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
ஒரு முறையாவது இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக வேண்டும். அதற்கான தகுதியும், உரிமையும் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை அஸ்வினுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பு உள்ள நிலையில், அவர் தான் விக்கெட் கீப்பராக செயல்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவும். இதனால், யாரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவும்.
என்னைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுலுக்கு தான் அதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைப் பற்றி நன்கு தெரியும். இவர்களது கூட்டணியில் இந்திய அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.