விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

Published : Jul 02, 2023, 12:28 AM IST
விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

சுருக்கம்

நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் தற்போது 6 போட்டிகளில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு மாறாக பா11சி திருச்சி அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வி அடைந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.

பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4 கோல் அடித்து இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் குவைத்துடன் பலப்பரீட்சை!

இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் அருண் கார்த்திக் 39 ரன்களும், என் எஸ் ஹரிஷ் 34 ரன்களும் சேர்த்தனர்.

பரிதாபமாக வெளியேறிய 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!

பின்னர் 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் விமல் குமார் மற்றும் சிவம் சிங் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் சேர்த்தனர். விமல் குமார் அதிரடியாக ஆடி 62 சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சிவம் சிங்கும் 51 ரன்களில் வெளியேற, ஆதித்யா கணேஷ் 13 ரன்களும், சுபோத் பதி 10 ரன்களும், பாபா இந்திரஜித் 8 ரன்களும் எடுக்கவே திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!

இந்த வெற்றியின் மூலமாக டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதே போன்று இன்றைய போட்டியில் தோற்று இருந்தாலும் 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டுயலில் 3ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக சென்றுள்ளது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!